Mr G Muthukumarasamy's eulogy at the State Funeral of Mr Lee Kuan Yew, founding Prime Minister of Singapore, on 29 March 2015. An English translation is included below.
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு லீ குவான் இயூவைப் பற்றி சில வரிகளைப் பேச கொடுக்கப்பட்ட அனுமதிக்கு நான் முதலில் நன்றி தெரிவிக்கிறேன். அவரைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய இருக்கு. அவர் சிறந்த தலைவர் மட்டுமல்ல ஒரு சிறந்த தந்தையும்கூட. அவரை நான் முதலில் பார்த்தப்போது ரொம்ப பெருமைப்பட்டேன். ஒரு தொழிலாளியா, ஒரு தொழிற்சங்கவாதியா, ஒரு தலைவனா நான் இன்றைக்கு இங்கே நின்று பேசுகிறேன் என்றால், அந்த பெருமையும் அவரைத்தான் சேரும்.
நான் சிறுவனாக இருந்தபோது, என் தகப்பனார் திரு லீயைப் பற்றி அடிக்கடி சொல்வாரு. அவரால்தான் (சிங்கப்பூரின்) இந்தியக் குடும்பங்கள் தலைதூக்கியுள்ளன. அந்தக் காலத்தில் பெண்களை வேலைக்கு அனுப்ப மாட்டாங்க. ஆண் மகன்தான் வேலை செய்ய வேண்டும் என்ற கலாச்சாரக் கட்டுப்பாடு எங்களுல் இருந்தது. அதனால எல்லா (குடும்பங்களிலும்) ஆண்மகன்தான் வேலை செய்வாங்க. அந்த மாதிரி வேலை செய்யும்போது (இந்திய குடும்பங்களில) ரொம்ப கஷ்டமாக இருந்தது. சில பிள்ளைகளின் படிப்பை நிறத்துவிடுவார்கள். குறைந்த சம்பளம் எடுத்துக்கொண்டு குடும்பத்தை வழிநடத்த சிரம்மமாக இருந்தது.
அந்த சமயத்துல இந்திய சமூகம் சிரமப்பட்டதை திரு லீ நன்கு அறிந்திருந்தாரு. எப்படியாவது உதவி செய்ய வேணும்னு உறுதியா இருந்தாரு. இந்திய பெண்களும் வேலைக்கு போகனும்; திறன்களை கத்துக்கனும்; பொருளாதார ரீதியா குடும்பத்துக்கு உதவியா இருக்கனும்னு திரு லீ ரொம்ப ஊக்குவிச்சாரு, அவங்களுக்கு தைரியம் கொடுத்தாரு.
அவர் பேச்சை கேட்டு அதிகமான இந்திய பெண்கள் வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க. அதனால அவங்களோட குடும்பங்களால அதிகமா சம்பாதிக்க முடிந்தது. அதே சமயத்துல பொது வீட்டுவசதி கட்டுப்படியான விலையில இருப்பதை திரு லீ உறுதிபடுத்தினாரு. கணவன் மனைவி இரண்டு பேருமே சேர்ந்து சம்பாதிச்சதால, அவங்களால ஓர் அடிப்படையான வீட்டை வாங்கி, தங்கள் குடும்பங்களை தொடங்க முடிஞ்சுது. இன்னைக்கு இந்திய சமூகத்துல நிறைய குடும்பங்களில இரண்டு பேரும் சம்பாதிக்கிறாங்க; அவங்க சிறப்பா வாழுறாங்க. அதற்காக நாம் திரு லீக்கு நன்றி சொல்லியே ஆகனும். இன்றைக்கு ரொம்ப பேரு சொந்த வீட்டில இருக்காங்க. அது எவ்வளவு பெரிய விஷயம்.
நான் இன்னொரு விஷயத்த சொல்ல விரும்புறேன். பல ஆண்டுகளுக்கு முன்னால, திரு லீயோடு எனக்கு தனிப்பட்ட முறையில ஒரு சந்திப்பு ஏற்பட்டது. அந்த சமயத்துல நான் PWDல ஒரு சாதாரண wireman வேலை பார்த்துட்டு இருந்தேன். பல பேரு திரு லீயை பற்றி, அவரோட கண்டிப்பு குணம் பற்றி சொல்வாங்க. ஒரு நாள் Changi Cottageல aircon சர்விஸ் பண்ணுனோனு என் சூப்பர்வைசர் என்னையும் என் சக ஊழியர்களையும் அங்கே போக சொன்னாரு. அங்கே யாரு குடியிருக்காங்க, அந்த இடத்தை யாரு பயன்படுத்துராங்கனு எங்களுக்கு தெரியாது. எங்க சூப்பர்வைசர் சொன்ன மாதிரியே நாங்க airconனை சர்விஸ் பண்னோம். வேலையை முடிக்கிற கட்டத்துல, அப்ப பிரதமரா இருந்த திரு லீ அந்த அறைக்குள்ள வந்தாரு. அவரை பார்த்ததும் எங்களுக்கு ஒரே பயமா போயிடுச்சு. இருந்தாலும் எங்க வேலையை செஞ்சு முடிச்சோம். நாங்க வேலையை முடிச்சதும், திரு லீ என்னை அழைச்சு, என்னோட சூப்பர்வைசரை கூட்டிக்கிட்டு வரச் சொன்னாரு. என் சூப்பர்வைசர் உள்ளே வந்தாரு. அவரை பார்த்து திரு லீ, “உங்களுக்கு ஒரு வேலையை கொடுத்தா, அதை நீங்கதான் செய்யனும். airconனை சர்விஸ் பண்ணும்படி நான் உங்ககிட்ட சொன்னேன். தயவுசெஞ்சு, அதை இப்ப சர்விஸ் பண்ணுங்க.”
எங்கே நாங்க வேலையை சுத்தமா செய்யலேயோனு எனக்கும் என் சக ஊழியர்களுக்கும் கவலையா போயிடுச்சு. என் சூப்பர்வைசர் airconனை சர்விஸ் பண்ணுவதை நாங்க பார்த்துகிட்டு இருந்தோம். அவரு வேலையை முடிச்சதும், திரு லீ சொன்னாரு, “இனிமேலும் நான் உங்களை பார்க்க விரும்புலேனு”, திரு லீ என் சூப்பர்வைசர்கிட்ட சொன்னாரு.
இந்த சம்பவம் என்மீது ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துச்சு. சொன்னதை கரக்ட்டா செய்யனும். அவங்கவங்க வேலையை அவங்கதான் செய்யனும். மூனாவது ஆளுக்கிட்ட செய்ய சொன்னா அந்த வேலையில இம்பேக்ட் சரியா இருக்காது. மற்றவங்ககிட்ட வேலையை கொடுத்துட்டு அந்த இடத்தை விட்டு போயிடக் கூடாது. நாம் செய்யுற வேலையிலே ஆர்வத்தை காட்டனும்; அதை ஒழுங்கா செய்யனும் என்கிற விஷயத்துல திரு லீ அதிக நம்பிக்கை கொண்டிருந்தாரு. இந்த அனுபவத்தை சொல்ல நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.
திரு லீ யூனியன்களுக்கும் யூனியன் உறுப்பினர்களுக்கும் நிறைய ஆதரவு கொடுத்தாரு. தன் மே தின பேச்சுகளில், திரு லீ, தொழிளாலிகள், முதலாளிகள் மற்றும் அரசாங்கம் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துவார். மேலும் தொழிளாலிகள் தங்களோட திறன்களை வளர்த்துக்கனோனு திரு லீ சொல்வாரு. அந்த காலத்துல “லெம்பாகா” இருந்துச்சு. அதில போய் படிக்கும்படி யூனியன் உறுப்பினர்களை அவரு வலுவா ஊக்குவிச்சாரு. நிறைய பேரு அவருடைய அறிவுரையை கேட்டு, படிச்சு, தங்கள் திறன்களை மேம்படுத்தி, technicians, engineersனு உருவாகினாங்க. அந்த மாதிரி முன்னுக்கு வந்தவர்களில் நானும் ஒருவர் என்பதில் பெருமைப்படுகிறேன்.
இவர் மாதிரி தலைவர் நமக்கு கிடைச்சது நாம் எல்லாரும் செய்த ஒரு பெரும் பாக்கியம்.
திரு லீ குவான் இயூ அவர்களே, உங்கள ஆத்மா சாந்தி அடைய நான் கடவுளை வேண்டுகிறேன்.
____________________
English translation of Mr G. Muthukumarasamy's eulogy
There is so much to talk about Mr Lee Kuan Yew. When I first met him, I was very honoured. He was an outstanding leader and has inspired my own personal development as a worker, a unionist and a leader.
When I was young, my father would often tell me about Mr Lee. He said that Mr Lee played a key role in advancing the Indian community in Singapore. If not for him, none would be able to stand on their feet. Because in those days, Indians did not send their women to work. Only men worked. That was the culture. Most Indian families were single income families. This caused financial hardship as most men earned low incomes. Families usually stopped sending their kids to school and sent them to work instead. How could we move forward like this? How could families manage with low incomes?
Mr Lee understood this very well. He saw the hardships experienced by the Indian community and was determined to help. So he publicly called for women to be brave and to go to work. He said, “Don’t be scared. We have safety measures in place for you.” He introduced the Vigilante Corps, to ensure the safety of women returning home from work at night. What he did greatly encouraged and emboldened Indian women to work, learn a skill and help their families financially.
As more Indian women started to work, their families began to earn more. Because Mr Lee also made sure that public housing was affordable, the combined incomes of the husband and wife enabled Indian families to purchase a basic house and start families. Today, there are many dual-income Indian families. Many Singaporeans today own their homes and are proud of it. We have to thank Mr Lee for that.
I went on to complete my education, and join the workforce. I would like to share with you a personal interaction with Mr Lee many years ago. I was then an apprentice wireman at the Public Works Department. Many told me stories about Mr Lee. They said, “Our PM, Mr Lee Kuan Yew, is a very hot-tempered man. If he wants, he will dismiss officers immediately.” Many said different things about Mr Lee. I didn’t worry too much about it because I wasn’t at that level to have any sort of interaction with him.
Unfortunately, I should have paid attention. Once, my colleagues and I were asked by my supervisor to go to Changi Cottage to service the air-conditioning system. We did not know who lived there or used the space. When we got there, we serviced the air-conditioning system as per my supervisor’s instructions. As we were finishing up, Mr Lee, who was then PM, came into the room and looked at us. How would you feel if he looked at you? We had heard that he is a hot-tempered man. We were very scared. In fact, we were shivering! We tried to control ourselves, finished the job and climbed down from the ladder.
When we were done, Mr Lee asked if we had completed the job. We said, “Yes, Sir”. Then Mr Lee asked where our supervisor was. We told Mr Lee he was outside. Mr Lee asked me to call him in. When my supervisor came in, Mr Lee said, “When a job is given to you, you should do it. I asked you to service the air-conditioning. Please service it now in front of me.” My supervisor immediately went up the ladder and started servicing the air-conditioner again.
I was dumbfounded! Maybe I did a terrible job! We were all very scared. We watched as my supervisor serviced the air-conditioning. My colleague whispered to me, “Don’t worry. I’ll explain later.” When he was done, Mr Lee told my supervisor that he did not want to see him again in the Istana or at the Changi Holiday Bungalow.
The incident left a deep impression on me. Mr Lee believed that one must do correctly what one is told, and everyone should do their own work. If a third person is asked to do the job, the impact would not be right. If it is our job, we should not pass it on to others. This is how a leader should be.
Mr Lee was indeed very strict. This father (Mr Lee), we must be principled like him. We must have a sense of duty and be upright like him. His philosophy is evergreen that we do well today.
Mr Lee was also like a father to the unions. In his May Day speeches he would encourage workers, employers and the government to work hand-in-hand. He said everyone must play their part. If the three of you work together, the management would be good. If you three fight amongst yourselves, it won’t be right. Sit down, think carefully and work together. Who else would teach us such things?
Mr Lee would urge us union members to upgrade our skills. He would tell us: “Don’t stagnate. There are a lot of courses for you to upgrade yourselves.” In those days, there used to be Lembaga (Adult Education Board) night classes. Many heeded his call, and became technicians and engineers. I’m proud to say I am one of them. If he didn’t teach us these things then, we wouldn’t be at this level today. All credit goes to him.
We are very fortunate to have had a leader like Mr Lee.
* * * * *
Explore recent content
Explore related topics